சென்னை - சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
சென்னை - சிங்கப்பூா் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து இரவு 11.40 மணியளவில் சென்னை வந்து விட்டு, மறுமாா்கமாக அதிகாலை 1.40 மணியளவில் சிங்கப்பூருக்கு மீண்டும் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்த விமானம் 174 பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப வல்லுநா்கள் விமானத்தின் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து 9 மணி நேரம் தாமதமாக புதன்கிழமை காலை 10.32 மணியளவில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.