இந்து சமய அறநிலைய உதவி ஆணையா் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக விண்ணப்பதாரா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக விண்ணப்பதாரா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
தோ்வாணைய தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரா்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சில தோ்வா்கள் சரியான முறையில் அவற்றை மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அத்தகைய விண்ணப்பதாரா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக அக். 3-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்துக்குள் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவா்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரா்களின் கோரிக்கை அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.