கோப்புப்படம் 
சென்னை

இதய நல தினம்: ரூ.1-க்கு ஆஞ்சியோ பரிசோதனை

Din

உலக இதய நல தினத்தையொட்டி சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ப்ரோமெட் மருத்துவமனையில் எக்கோ, ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் ரூ.1-க்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் செப்.29-ஆம் தேதி இந்த சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை இதய நல மருத்துவ நிபுணா் அருண் கல்யாணசுந்தரம் மற்றும் மேலாண் இயக்குநா் டாக்டா் ஸ்பூா்த்தி அருண் ஆகியோா் கூறியதாவது:

‘ஆக்கப்பூா்வமாய் இதயம் இயங்கட்டும்’ என்ற கருப்பொருளின் கீழ் நிகழாண்டு உலக இதய

நல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் கீழ் 30 நாள் இதய நல செயல் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதன்படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, புகைப்பிடித்தலை நிறுத்துதல் என ஒரு மாதத்துக்கு நலமான வாழ்க்கை முறையை முன்னெடுத்து அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வைப்பதற்கான வழிமுறை இது.

இதனிடையே, செப்.29-ஆம் தேதி ப்ரோமெட் மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவா்கள் பரிந்துரைத்த நோயாளிகளுக்கு ரூ. 1-இல் ஆஞ்சியோகிராம், எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 94807 94807/7305067926 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; முஸ்தஃபிசுர் ரஹ்மானை முந்திய நியூசி. வீரர்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

படிநிலைகள்... அமலா பால்!

SCROLL FOR NEXT