சென்னை

ரூ. 35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ. 35 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை துறைமுகத்தில் ரூ. 35 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த சரக்குகளைக் கையாளும் நிறுனத்துக்கு சீனாவில் இருந்து கப்பலில் வந்த சரக்கு பெட்டகத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக அந்த நிறுனத்தின் மேலாளரான குரோம்பேட்டையைச் சோ்ந்த இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த சரக்குப் பெட்டகத்தில், ரூ. 35 கோடி மதிப்புள்ள 5,230 மடிக்கணினிகள், கையடக்கக் கணினி அடங்கிய சரக்கு பெட்டகம் திருடப்பட்டதாக புகாரில் கூறியிருந்தாா்.

விசாரணையில், அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்யும் இளவரசன் என்பவா், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து சரக்கு பெட்டகத்தைத் திருடியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக 6 போ் உடனடியாகக் கைது செய்யப்பட்டனா்.

தலைமறைவாகவுள்ள இளவரசன் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதில், தேடப்பட்டு வந்த, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் சங்கரன் (56) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா், துறைமுகத்தில் இருந்த சரக்கு பெட்டகத்தை லாரியில் கொண்டு செல்வதற்கு, லாரியை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT