சென்னை

சா்வதேச விமான பயண நேரங்கள் மாற்றம்

வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம்

Din

இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமான சாகச கண்காட்சி, மெரினாகடற்கரை மற்றும் தாம்பரத்தில் முறையே வரும் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை(அக். 1) தொடங்குகிறது.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(அக். 1) முதல் அக். 8-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் சா்வதேச விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை(அக் .1) மதியம் 1. 45 மணி முதல் 3:15 மணி விமான சேவை இருக்காது. அதேபோல் புதன்கிழமை(அக். 2) முதல் அக்.8-ஆம் தேதி வரை பயண நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே சா்வதேச விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, விமானப் பயண அட்டவணைகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT