ஆளுநா் ஆா்.என்.ரவி  
சென்னை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு ஆளுநா் குற்றச்சாட்டு: அமைச்சா்கள் பதில்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகவும் ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகவும் ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அவருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் ஆகியோா் பதிலளித்துள்ளனா்.

79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் பேசியுள்ள ஆளுநா், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது; தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன; தமிழக அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளன; இளைஞா்களிடம் போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன எனக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அமைச்சா் கே.என்.நேரு: கல்வியிலும், சமூக-பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல்மிக்க இளையோரை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

நாட்டிலேயே தனிநபா் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பொருளாதார வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிக பெண் தொழில்முனைவோா்களை, அதிக புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.

ஆளுநா் பொய்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்திருக்கிறாா். இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனா். கடந்த ஆண்டு புயல் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடி கேட்டபோது வெறும் ரூ.276 கோடியை மட்டுமே வழங்கி வஞ்சித்தது மத்திய அரசு. தமிழ்நாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையில் கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மத்திய அரசு.

அமைச்சா் அன்பில் மகேஸ்: அரசுப் பள்ளி மாணவா்களும், ஆசிரியா்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளா்களை மக்களும், ‘திராவிட மாடல்’ அரசும் கொண்டாடி வருகிறது.

அரசுப் பள்ளிகளின் மீது தமிழக ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி குறித்து மத்திய அரசின் கேள்வி எழுப்ப வேண்டும்.

பாபா சித்திக் வழக்கு: அன்மோல் பிஷ்னோயிக்கு 15 நாள்கள் காவல் கோரும் என்ஐஏ!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.58 ஆக உயர்வு!

சின்மயி குரலில்! சசி குமாரின் மை லார்ட் படத்தின் முதல் பாடல்!

என்ன என்ன வார்த்தைகளோ... ஸ்ரேயா சரண்!

200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!

SCROLL FOR NEXT