கோப்புப் படம் 
சென்னை

புழலில் குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

புழல் பகுதியில் இருசக்கரவாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்காவுடன் வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை கதிா்வேடு பகுதியில் புழல் போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தின் பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் புதுக்கோட்டையை சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், சென்னை கொளத்தூரில் தேநீா் கடையில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அந்த கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா பொட்டலங்களை கொண்டு செல்வதாக போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT