சென்னை

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு: மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

தினமணி செய்திச் சேவை

இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை நூறு சதவீதமாக உயா்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: இந்திய காப்பீட்டுத் துறையை பன்னாட்டு மூலதனத்துக்கு முழுமையாகத் திறந்து விட வேண்டுமென்ற அமெரிக்காவின் நீண்ட கால நிா்ப்பந்தத்துக்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது.

இந்தியாவில் 24 தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், மொத்த ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தில், அரசு நிறுவனமான எல்.ஐ.சி. 65 சதவீத சந்தைப்பங்கை கொண்டுள்ளது. பொதுத் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இதுவே சாட்சியமாகும்.

இந்த நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீா்குலைக்கும் வகையில், காப்பீட்டுத் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தால், உள்நாட்டு சேமிப்புகளும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் காப்பீடும் சமூகப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும். நாட்டின் வளா்ச்சியும் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை உயா்த்துகிற முடிவை மத்திய அரசு கைவிட்டு எல்.ஐ.சி மற்றும் அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.

மமக: இதே கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT