போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது தொடர்பாக...
சென்னை மெட்ரோ ரயில்: புதிதாக இயக்கப்படவுள்ள போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்த வழித் தடத்தில் 3 முறை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில், போரூர்-பூந்தமல்லி வழித்தடத்தில் 10 ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தவறி விழுவதை தவிர்க்கும் வகையில் ஆள் உயர தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாத இறுதிக்குள் பூந்தமல்லியில் இருந்து போரூரைக் கடந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
போரூர் - வடபழனி இடையே மெட்ரோ நிலைய பணிகள் நிறைவடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
A new facility is about to be introduced in the Chennai Metro train.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.