பிரதிப் படம்
சென்னை

205 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 205 மருந்துகள் தரமற்றவையாகவும், இரு மருந்துகள் போலியாகவும் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.

தினமணி செய்திச் சேவை

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 205 மருந்துகள் தரமற்றவையாகவும், இரு மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 205 மருந்துகள் தரமற்றவையாகவும், 2 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்துகொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT