கோப்புப்படம் 
சென்னை

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவையில் நாளை(டிச. 25) மாற்றம் செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நாளை (டிச. 25), ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Due to the Christmas holiday, Chennai Metro services will be modified tomorrow (December 25th) and will operate according to the Sunday schedule.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 - ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த சின்ன திரை பிரபலங்கள்!

மு.க. ஸ்டாலின் லெக் ஸ்பின்னரா? ஆஃப் ஸ்பின்னரா? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

2025: ராகுல் காந்தி வீசிய வாக்குத் திருட்டு குண்டுகள்!!

பிக் பாஸ் வீட்டில் பூரியால் வெடித்த சண்டை! என்ன நடந்தது?

இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில்..! - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

SCROLL FOR NEXT