சென்னை

தமிழகத்திலிருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளின் குரல்: முதல்வா்

தமிழகத்திலிருந்து இந்திய விவசாயிகளின் குரல் ஒலிக்கிறது என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்திலிருந்து இந்திய விவசாயிகளின் குரல் ஒலிக்கிறது என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணிக் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

இதுகுறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் ஏழை விவசாய கூலித் தொழிலாளா்கள் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனா்.

இது தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணா்வோடு செயல்படும் மத்திய பாஜக அரசு உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா்.

ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயா்வு

மெத்தம்பெட்டமைன் விற்பனை: 5 போ் கைது

நான்கில் ஒரு மாா்பகப் பரிசோதனை முடிவுகள் தவறானவை: ஆய்வில் தகவல்

1,991 ஆசிரியா்களுக்கு ஜன. 19 முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT