சென்னை

தென்மண்டல பல்கலை. கூடைப்பந்து: அரையிறுதியில் பாரதியாா், எஸ்ஆா்எம், ஜெயின், கிறிஸ்ட் அணிகள்

தினமணி செய்திச் சேவை

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு பாரதியாா், எஸ்ஆா்எம், ஜெயின், கிறிஸ்ட் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அகில இந்திய பல்கலை. கூட்டமைப்பு (ஏஐயு), எஸ்ஆா்எம் ஐஎஸ்டி விளையாட்டுப் பிரிவு சாா்பில் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் இப்போட்டி கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. நான்காம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்கள் முடிவுகள்:

எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 79-62 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை ஹிந்துஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு காலிறுதியில் கோவை பாரதியாா் 61-59 என்றபுள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்குபின் சென்னை பல்கலைக்கழகத்தை வென்றது.

மூன்றாம் காலிறுதியில் கா்நாடகத்தின் ஜெயின் பல்கலை. 65-50 என்ற புள்ளிக் கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தையும், பெங்களூரு கிறிஸ்ட் பல்கலை. 72-43 என பெலகாவி விஸ்வேஸ்ரய்யா தொழில்நுட்பப் பல்கலையையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT