விரைவு ரயில் 
சென்னை

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

சிஎஸ்எம்டி மும்பை - சென்னை அதிவிரைவு ரயில் (எண்: 22159) குண்டக்கல் நிலையத்துக்கு ஜூலை 25=ஆம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும். ஹுப்ளி - சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 17313) குண்டக்கல்லில் ஜூலை 25-ஆம் தேதி முதல் பிற்பகல் 3.05 மணிக்கு வந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும்.

ஏக்தாநகா் - சென்னை வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20920) குண்டக்கல்லில் ஜூலை 30-ஆம் தேதி முதல் மாலை 6.55 மணிக்கு வந்து இரவு 7.05 மணிக்குப் புறப்படும். அகமதாபாத் - சென்னை வாராந்திர விரைவு ரயில் (எண்: 22920) குண்டக்கல்லில் ஜூலை 28-ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு வந்து 8.10 மணிக்குப் புறப்படும். மும்பை (லோக் மான்ய திலக்) - சென்னை அதிவிரைவு ரயில் (எண்: 12163) ஜூலை 25-ஆம் தேதி முதல் குண்டக்கல் நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும்.

புணே - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 16381) ஜூலை 25-ஆம் தேதி முதல் குண்டக்கல் நிலையத்துக்கு இரவு 9.50 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!

செஸ் போட்டியில் ராஜாவைத் தூக்கி எறிந்த நகமுரா! தோற்கடித்து தன் பாணியில் பாடம் புகட்டிய குகேஷ்!!

லியோவைச் சந்திக்கும் பென்ஸ்?

தலைகீழமாக மாறப்போகும் ஆட்டம்! பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்!

காஸாவில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு டிரம்ப் ஆதரவு!

SCROLL FOR NEXT