சென்னை

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட புதிய சாதனங்கள!

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட புதிய சாதனங்கள் அறிமுகம்...

DIN

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்டுவதற்காக புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்தில், விமானங்கள் தரையிறங்கும்போதும் புறப்படும்போதும் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் பறவைகளின் இடையூறு 100 சதவிகிதம் குறைக்க முடியவில்லை என்பதால், இடி ஓசை எழுப்பக் கூடிய ’தண்டர் பூம்ஸ்’ என்ற 30 சாதனங்களை விமானப் போக்குவரத்துத் துறை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

விமானங்களை பறவைகள் தாக்கும் அபாயத்தை குறைக்கவும், பாதுகாப்பான விமான இயக்கத்தை உறுதி செய்யவும் புதிய சாதனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT