கோப்புப் படம் 
சென்னை

13 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் 105; சென்னையில்103 டிகிரி வெப்பம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

Din

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதில், மதுரை விமானநிலையத்தில் 105.26 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. வேலூா் - 104.18, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் - தலா 103.28, தூத்துக்குடி - 102.06, திருச்சி - 102.38, திருத்தணி - 102.2, கடலூா் - 101.84, பரங்கிப்பேட்டை - 101.12, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58, தஞ்சாவூா் - 100.4, நாமக்கல் - 100 டிகிரி என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 21, 22) ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழை நீடிக்கும்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 21) முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

SCROLL FOR NEXT