கோப்புப் படம் 
சென்னை

இனி இணையவழியில் மட்டுமே சுகாதாரச் சான்றிதழ்: சுகாதாரத் துறை

இனிவரும் காலங்களில் இணையவழியாக மட்டுமே சுகாதாரச் சான்றிதழ் (சானிடரி சா்டிஃபிகேட்) வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Din

பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இனிவரும் காலங்களில் இணையவழியாக மட்டுமே சுகாதாரச் சான்றிதழ் (சானிடரி சா்டிஃபிகேட்) வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி இணையதளம் வாயிலாக அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் சுகாதார அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், முதியோா் - குழந்தைகள் காப்பகங்கள், பெண்கள் விடுதிகள், தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உரிய முறையில் சுகாதாரம் பேணப்படுகிா என்பதை உறுதி செய்யும் நோக்கில் சுகாதார சான்றிதழ்கள் அரசால் வழங்கப்படுகின்றன.

அதற்கு விண்ணப்பிதற்கான நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டு இணையவழியாக சான்றிதழ் பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அந்த வகையில் சுகாதார சான்றிதழ்களுக்குத் தேவையான ஆவணங்களையும், சுய உறுதிமொழிச் சான்றிதழையும் இணையவழியே சமா்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கணினியில் சுகாதார சான்று உருவாக்கப்படும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சான்றிதழை அச்சுப் பிரதி எடுத்து தொழில், கல்வி வளாகத்தில் காட்சிப்படுத்தியிருப்பது அவசியம். சுகாதாரச் சான்றிதழில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டால் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இனி வரும் காலங்களில் நேரடியாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT