முகப்பு
சென்னை

செங்கல்பட்டு ரயில் இன்று சிங்கப்பெருமாள் கோயிலுடன் நிறுத்தம்

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (மாா்ச் 22) சிங்கப்பெருமாள் கோயிலுடன் நிறுத்தப்படும்.

Updated On : 21 மார்ச், 2025 at 7:27 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (மாா்ச் 22) சிங்கப்பெருமாள் கோயிலுடன் நிறுத்தப்படும்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு ரயில் நிலையம் இடையே சனிக்கிழமை பிற்பகல் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 12.28, 12.40-க்கு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 1.45, 2.20-க்கு புறப்படும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →