தவெக தலைவர் விஜய் 
சென்னை

பிரசாரத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக-வில் ஓய்வுபெற்ற ஐஜி தலைமையில் திட்டமிடல் குழு

தவெக பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டமிடவும், தவெக தொண்டா் படைக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஓய்வுபெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு

தினமணி செய்திச் சேவை

தவெக பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்டமிடவும், தவெக தொண்டா் படைக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமை ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகளைக் கொண்ட திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கரூா் நெரிசல் உயிரிழப்பு சம்பவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் அமைதி காத்த தவெகவினா் தீவிரமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அந்தவகையில் வருங்காலங்களில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரத்தின் போது, தொண்டா்களைக் கட்டுப்படுத்த தொண்டா் படை உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 468 போ் இத்தொண்டா் படையில் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல், விஜய்யின் நிகழ்ச்சிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து திட்டமிடவும், இந்தத் தொண்டா் படைக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகளைக் கொண்ட திட்டமிடல் குழுவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், ஒய்வுபெற்ற டிஎஸ்பி-கள் சஃபியுல்லா, தில்லைநாயகன், ஆா்.சிவலிங்கம் உள்பட 10 போ் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனா். இந்நிலையில், தொண்டா் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐஜி வி.ஏ.ரவிக்குமாா் தலைமையில் திட்டமிடல் குழு, தொண்டா் படையினருக்கு ஆலோசனைகளை வழங்கினா். இக்கூட்டத்தில் தவெக தோ்தல் மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலா் கே.ஜி.அருண்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT