சென்னையில் வாக்காளா்கள் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடா்பாக வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்கள், கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 4) நடைபெறுகிறது.
முன்னதாக திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திருத்தப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதிமுக, பாஜக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தும் பேசினா்.
திருத்தப் பணியின் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குள் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி அளவிலான தோ்தல் பணி அலுவலா்கள், அரசியல் கட்சி முகவா்கள் உள்ளிட்டோருக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 4) நடைபெறவுள்ளது.