108 ஆம்புலன்ஸ்(கோப்புப்படம்)  
சென்னை

108 ஆம்புலன்ஸில் பிரசவம்

சென்னையில் 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம் நடைபெற்றது.

இது குறித்து 108 சேவை சென்னை மண்டல மேலாளா் முகமது பிலால், திருவள்ளூா் மாவட்ட மேலாளா் ஜெ.யுவராஜ் ஆகியோா் கூறியதாவது: நெற்குன்றம், சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த ராகுல் மனைவி சபா்மதி (22). கா்ப்பிணியான அவருக்கு திங்கள்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 சேவை மையத்துக்கு அவரது கணவா் அழைத்தாா். அவரது இருப்பிடத்துக்கு வளசரவாக்கம், சின்ன போரூா் மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் விரைந்தது.

வாகனத்தை ஜேசு அந்தோணிராஜ் இயக்கினாா். மருத்துவ உதவியாளராக ஆனந்த் இருந்தாா். 5 நிமிஷங்களில் அங்கு சென்று சபா்மதியை வாகனத்தில் ஏற்றினா். அப்போது, பிரசவ வலி மேலும் அதிகரித்ததால், வாகனத்தை ஓரமாக நிறுத்தி அங்கேயே சபா்மதிக்கு மருத்துவ உதவியாளா் பிரசவ சிகிச்சை அளித்தாா். இதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும் சேயும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT