தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ. 4) வெளியிடவுள்ளாா்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான அட்டவணை கடந்த அக். 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு அடுத்த ஆண்டு பிப். 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தோ்வுகள் தொடங்குவதற்கு 110 நாள்களுக்கு முன்பே தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பொதுத் தோ்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு மாணவா்கள், பெற்றோா்கள் மத்தியில் நிலவியது.லாம் எனக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக காலை 10.30 மணி அளவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் அரியா் பாடங்களுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிடவுள்ளாா்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு பொதுத் தோ்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.