நிகழ்ச்சியில் திரளான பெண் போலீஸாா் பங்கேற்றனா்.  
சென்னை

விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதி உதவி

விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதி உதவி செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதி உதவி செய்தனா்.

சென்னை பெருநகர காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் மு.சுமதி (48). இவா், கடந்த செப்டம்பா் 11-ஆம் தேதி தனது கணவா் முருகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

சுமதியின் மகன் உதயகுமாா் (20) பிடெக் நான்காம் ஆண்டும், மகள் சந்தியா (15) பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், தாயின் திடீா் உயிரிழப்பால் குடும்பம் வறுமையில் சிக்கும் நிலை நிலையும் ஏற்பட்டது.

இதையறிந்த அவருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சோ்ந்த பெண் காவலா்கள், சுமதி குடும்பத்துக்கு உதவ முடிவு செய்தனா். இதற்காக அவா்கள், 2003-ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்த 1,354 பெண் காவலா்களையும் ஒன்றிணைத்தனா். வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் வசூலான ரூ.11,33,500 நிதியை சுமதியின் குடும்பத்தினரிடம் சில நாள்களுக்கு முன் வழங்கினா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT