திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர நவ. 14-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நவ. 14 வரை நீட்டிக்கப்படுள்ளது. 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள், அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து சோ்ந்து கொள்ளலாம்.
ஓராண்டு தொழில் பிரிவுகளான மேனுஃபேக்சரிங் புரோசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோமேஷன், இன் பிளான்ட் லாஜிஸ்டிக் மற்றும் இரண்டாண்டு தொழில் பிரிவான டெக்னிக்கல் மெச்சாட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளுக்கும் தேரந்தெடுக்கப்படுகின்றனா்.
இந்தப் பிரிவுகளில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ்-2, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி 100% தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு மாதம் ரூ.750, புதுமைப் பெண்
திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, பாடப் புத்தகங்கள், தையல் கட்டணத்துடன் 2 செட் சீருடைகள், இலவச பேருந்துப் பயண அட்டை, ஷூ ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் கிடையாது.
சோ்க்கைக்கு ‘முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், குமரன் நகா் இரண்டாவது தெரு, திருவொற்றியூா், சென்னை- 19’ என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.