சென்னை

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

நீலாங்கரையில் காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரவாயல் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (54). இவரின் நண்பா் தங்கையா (32). கட்டடத் தொழிலாளியான கிருஷ்ணமூா்த்தி, தங்கையாவுடன் பைக்கில் நீலாங்கரைக்கு திங்கள்கிழமை வந்தாா். பின்னா், இருவரும் அங்கிருந்து மதுரவாயலுக்குப் புறப்பட்டனா். பைக்கை கிருஷ்ணமூா்த்தி ஓட்டினாா்.

நீலாங்கரை, வைத்தியலிங்க சாலையில் இருந்து, கிழக்குக் கடற்கரை சாலையில் திரும்பும்போது, கோவளத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கி வேகமாக சென்ற சொகுசு காா், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த தங்கையா, மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரை ஓட்டி வந்த நபா், காரில் இருந்த 2 கல்லூரி மாணவா்கள் ஆகிய 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் 3 பேரும் மது போதையில் காரில் வந்திருப்பது தெரிய வந்தது. அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT