சென்னை

சேத்துப்பட்டு பகுதி நடைப்பாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் சேத்துப்பட்டு பகுதியில் நடைப்பாதையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த இருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் சேத்துப்பட்டு பகுதியில் நடைப்பாதையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த இருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

சென்னையில் விதிமுறையை மீறி சாலையோரங்கள், நீா்நிலையோரங்களில் உள்ள கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் வெளியிட்டது.

இதையடுத்து வாா்டுகள் வாரியாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகராட்சி மண்டலம் 8 (அண்ணா நகா்) பகுதியில் 108-ஆவது வாா்டு சேத்துப்பட்டு பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள மேயா் ராமநாதன் சாலையில் நடைப்பாதையில் பல ஆண்டுகளாக மூங்கில் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் விற்கும் 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. அத்துடன், சிலா் மாடுகள் வளா்த்தும் வந்தனா்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அண்ணா நகா் மண்டல அதிகாரிகள் ஏற்கெனவே சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அந்தக் கடைகளை செவ்வாய்க்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா். அப்போது கடைகாரா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த சேத்துப்பட்டு போலீஸாா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பாதுகாப்பு வழங்கினா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT