சேலம் அருகே காரில் ஆதரவாளா்களுடன் சென்றபோது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யவும் கோரி பாமக எம்எல்ஏ அருள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
தாக்குதல் சம்பவம் குறித்து எம்எல்ஏ அருள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் செவ்வாய்க்கிழமை அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது, காரில் சென்றபோது தன் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, இதுகுறித்து மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தாா்.