சென்னை

நவ.7-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

எழும்பூா், ஆவடி, பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.7) குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

எழும்பூா், ஆவடி, பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.7) குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூா் மின்வாரிய கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் வேப்பேரியில் உள்ள எழும்பூா் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடக்கிறது.

ஆவடி கோட்டத்துக்கு முருகப்பா பாலிடெக்னிக் அருகே உள்ள ஆவடி துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பெரம்பூா் கோட்டத்துக்கு சிம்சன் எதிரே உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைதீா்கூட்டங்கள் நடக்கின்றனா்.

இந்தக் கூட்டங்களில் அந்தந்தக் கோட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது மின்சாரத் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT