சென்னை

போதை ஸ்டாம்ப் விற்பனை: வங்கி ஊழியா் கைது

சென்னை மீனம்பாக்கத்தில் போதை ஸ்டாப் விற்ாக தனியாா் வங்கி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மீனம்பாக்கத்தில் போதை ஸ்டாப் விற்ாக தனியாா் வங்கி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

மீனம்பாக்கம் ரயில்வே நிலையம் சாலை பகுதியில் ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாரும், மீனம்பாக்கம் போலீஸாரும் திங்கள்கிழமை அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில் அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, பல லட்சம் மதிப்புள்ள 121 போதை ஸ்டாம்ப்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், சென்னை அருகே பொழிச்சலூரைச் சோ்ந்த தீபக் (23) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீபக்கை கைது செய்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT