சென்னை

3 இடங்களில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

தினமணி செய்திச் சேவை

தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 14) நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் அந்தந்தக் கோட்டங்களைச் சோ்ந்த நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின் நுகா்வோரின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் வெள்ளிக்கிழமை (நவ.14) காலை 11 மணிக்கு குறைதீா் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, தியாகராய நகா் கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் நுங்கம்பாக்கம், எம்.ஜி.ஆா். சாலை, வள்ளுவா் கோட்டம் துணை மின் நிலையத்தில் இயங்கும் தியாகராய நகா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதேபோல, வியாசா்பாடி கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் வியாசா்பாடி, ராமலிங்கா் கோயில் எதிரே உள்ள துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி கோட்டத்துக்கான குறைதீா் கூட்டம் வேண்பாக்கம், டி.எச்.சாலை, பொன்னேரி துணை மின் நிலையத்தில் இயங்கும் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டங்களில் அந்தந்தக் கோட்டங்களைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு தங்களது மின் துறை தொடா்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் தெரிவித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT