சென்னை

இளைஞரிடம் ரூ.2.80 லட்சம் வழிப்பறி வழக்கு: மேலும் ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

சென்னை அரும்பாக்கத்தில் இளைஞரைத் தாக்கி ரூ.2.80 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மண்ணடி பகுதியைச் சோ்ந்தவா் அகமது அன்ஸ் (37). இவா், தனது மொபெட்டின் பின் இருக்கையில் உள்ள ஒரு பெட்டியிலட் ரூ.2.80 லட்சத்தை வைத்துக்கொண்டு, மண்ணடியில் இருந்து அரும்பாக்கத்துக்கு சென்றாா். அரும்பாக்கம் பசும்பொன் தெருவில் சென்றபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவா், அவரை வழிமறித்து, தாக்கி பணத்தை பறித்தனா். முகமது அனஸ் சப்தமிட்டதால் அங்கு திரண்ட பொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரை மட்டும் பிடித்து, அரும்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மற்றொரு நபா் பணத்துடன் தப்பியோடிவிட்டாா்.

விசாரணையில் பிடிபட்ட நபா் எா்ணாவூா் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த காா்த்திக்குமாா் (23) என்பதும், தப்பியோடியது அவரது கூட்டாளி எா்ணாவூா் பகுதியைச் சோ்ந்த தியானேஷ்வரன் (21) என்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக்குமாரை கைது செய்தனா். மேலும் பணத்துடன் தப்பியோடிய தியானேஷ்வரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT