சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி, வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளை தெருவில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வளாகத்திலுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த இந்து சம 
சென்னை

துறைமுகம், ராயபுரம் தொகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

தினமணி செய்திச் சேவை

சென்னை துறைமுகம், ராயபுரம் தொகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் துறைமுகம், ராயபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி, துறைமுகம் தொகுதி ராயபுரம் மண்டலம் வால்டாக்ஸ் சாலையி வ.உ.சி. தெருவில் ரூ.8.55 கோடியில் சமுதாயக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும், அதே பகுதியில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.41 கோடியில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பாா்வையிட்டு பணிகளின் நிலையை அறிந்தாா். அந்தப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, அமைச்சா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது சென்னை உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான காலை உணவின் தரம் அறிய, அதைச் சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு மேற்கொண்டாா். மாணவா்களிடமும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து அண்ணாபிள்ளை தெருவில் நடைபெற்று வரும் நவீன பெரிய சமுதாய நலக்கூடம், மூலக்கொத்தளத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாயக் கூடம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது சென்னை மேயா் ஆா்.பிரியா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் அ.சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT