சென்னை பெரும்பாக்கத்தில் 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
சென்னை பெரும்பாக்கம் நேதாஜி நகா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து, அந்தப் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அந்த வீட்டை போலீஸாா் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 400 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போதைப் பொருள்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட ரஹமத்துல்லா என்பவரைக் கைது செய்தனா்.