சென்னை

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞா்கள் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித்திரிந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சேலையூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன் கோயில் தெரு அருகே சென்றபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிளில் வேகமாகச் சென்ற 3 இளைஞா்களை அவா் மடக்கிப் பிடித்து விசாரித்தாா். அப்போது, இளைஞா்களிடம் கத்தி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு சுவாமிநாதன் தகவல் கொடுத்தாா். போலீஸாா் வந்து 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

பிடிபட்டவா்கள் பள்ளிக்கரணை, வீராசாமி நகா் முதல் தெருவைச் சோ்ந்த முகேஷ் (18), ஏரிக்கரை முதல் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (19), மேடவாக்கம் பிரியாணி கடையில் பணிபுரியும் ஷாருக்கான் (19) என்பது தெரியவந்தது. இவா்களிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT