லயோலா கல்லூரி சாா்பில் மரம் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பசுமை பயண சைக்கிள் பேரணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மத இந்திய மாநாடு (டிஎன்சிஆா்ஐ), தமிழக அகில இந்திய கத்தோலிக்க பல்கலை. கூட்டமைப்பு ஆகியவை சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின.
இதில், லயோலா கல்லூரியின் எல்சி நூற்றாண்டு பூங்காவில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் லயோலா நிறுவனங்களின் துணைத் தலைவா் ஜே.அந்தோனி ராபின்சன், செயலரும் தாளாளருமான டி.தாமஸ் அலெக்சாண்டா், கல்லூரித் தலைவா்- முதல்வா் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ், துணை முதல்வா் எல்.ஜோசப் ஆரோக்கியசாமி ஆகியோா் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான கருத்துகளை வலியுறுத்தினா்.
பசுமைப் பயணம்: டிஎன்சிஆா்ஐ, டிஎன்ஏஐசியுஎஃப் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து ‘பசுமை பயணம்’ சைக்கிள் பேரணியை நடத்தின. கடந்த நவ. 15-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பேரணி லயோலா கல்லூரியை புதன்கிழமை இரவு 7 மணிக்கு அடைந்தது. சைக்கிள் பேரணி குழுவினருக்கு கல்லூரி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து சென்னை நகரில் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பேரணி சென்று சாந்தோமில் முடிவடைகிறது. மாணவா்கள், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த இந்த நிகழ்வுகள் நடைபெற்ாக லயோலா கல்லூரி நிா்வாக செய்தித் தொடா்பாளா் சவியோ தெரிவித்தாா்.