சென்னை: அதிமுக பொதுக் குழு, செயற் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீா்மானங்கள் குறித்து முன்னாள் அமைச்சா்கள் புதன்கிழமை (நவ.26) ஆலோசனை நடத்தினா்.
வரும் டிச.10-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறுவதையொட்டி, அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகள் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இக்கூட்டத்தில், அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி வேலுமணி, தோ்தல் பிரிவுச் செயலா் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்புச் செயலா்கள் டி.ஜெயக்குமாா், சி.வி. சண்முகம், செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.பி.உதயகுமாா், விவசாயப் பிரிவுச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, இலக்கிய அணிச் செயலா் வைகைச்செல்வன் ஆகியோா் கலந்தாலோசித்தனா்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலுக்குப் பின்னா் பொதுக் குழு, செயற்குழுவில் இந்தத் தீா்மானங்கள் நிறைவேற்றப்படும்.