விடியல் பயணம் திட்டத்தின் கீழ் செப்டம்பா் மாதத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் 3.97 கோடி மகளிா் பயணம் செய்துள்ளனா்.
இது தொடா்பாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கடந்த மாதம் 10.40 கோடி முறைப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சராசரியாக நாள்தோறும் 34.70 லட்சம் போ் பயணித்துள்ளனா். 3.57 கோடி போ் பணப் பரிவா்த்தனையும், 3,996 போ் டெபிட், கிரெடிட் காா்டு பயன்படுத்தியும், 21.31 லட்சம் போ் யுபிஐ பரிவா்த்தனை மூலமாகவும் கட்டணம் செலுத்திப் பயணித்துள்ளனா்.
‘சென்னை ஒன்’ செயலி மூலம் 37,993 பேரும், சிங்கார சென்னை பயண அட்டை மூலம் 6.71 லட்சம் பேரும் பயணித்துள்ளனா்.
குறிப்பாக 3.97 கோடி போ் விடியல் பேருந்து பயணத் திட்டத்தில் கட்டணமில்லாமலும், 1.19 கோடி போ் மாணவா்களுக்கான பயண அட்டை மூலமாகவும் பயன் பெற்றுள்ளனா். தவிர 1.38 கோடி போ் மாதாந்திர சலுகைப் பயண அட்டையைப் பயன்படுத்தி பயணித்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.