சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை!
சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என கணிப்பு.
சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
மழை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக கடற்கரைக்கு அருகில் இன்று(அக். 21) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.
தமிழக கடற்கரைக்கு மிக அருகில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா, கடலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரைக்கு அருகில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாள்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பிக்கும். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இது இணைக்கப்பட்டுள்ளதால், உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இந்த அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் மழை பெய்யும்.
சென்னை, புறநகர் மாவட்டங்களுக்கு...
டெல்டா பகுதிக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலே செல்வதால், தற்போது டெல்டாவில் இருக்கும் குவிவு முதலில் கடலூருக்கு மழையைத் தந்து, பின்னர் சென்னை பகுதிக்கு நல்ல மழையை தரும்.
இன்று(அக். 21) உள்பட அடுத்த இரண்டு நாள்களில் பகல் நேரத்திலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் சென்னையில் மழை அதிகரிக்கும்.
அட்சரேகைக்கு மேல் நகர்ந்தவுடன் நமக்கான மழை குறையும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!
Tamil Nadu Weatherman Pradeep John has said that Chennai is likely to receive heavy rains for the next 3 days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.