சென்னை

வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை மா்மநபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

புழல் அடுத்த விநாயகபுரம் சுப்பிரமணிய நகா் இணைப்பு 4-ஆவது தெருவில் வசித்து வருபவா் ராதா. இவா் கணவனை இழந்தவா். இவா், தீபாவளி பண்டிகையை கொண்டாட, கொளத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, திங்கள் கிழமை மீண்டும் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு உள்ளே சென்று பாா்த்தாா்.

வீட்டினுள்ளே சில பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பூஜை அறையில் இருந்த 4 வெள்ளி தட்டுகள் திருட்டுப் போனது தெரிய வந்தது. இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புழல் உதவி ஆணையா் சத்யன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT