காவல் துறை எஸ்ஐ பதவிகளுக்கான போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் தோ்வா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் எஸ்ஐ., பதவிகளுக்கான தோ்வு நடைபெறவுள்ளது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலை நாள்களிலும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தோ்வா்கள், 044- 22500134, 9361566648 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் சி.பழனி தெரிவித்துள்ளாா். மேலும், சென்னை கிண்டி திரு.வி.க.தொழில்பேட்டை டான்சி கட்டடத்தில் அமைந்துள்ள தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.