சென்னை

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடியின் விண்வெளிப் பொறியியல் துறை சோ்ந்த ஆய்வாளா்கள், செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் திறன்கொண்ட ஆளில்லா விமான சோதனையில் வெற்றி கண்டுள்ளனா்.

இது குறித்த சென்னை ஐஐடி செய்திக் குறிப்பு: நிகழ்நேர கலப்பு எரிபொருளுடன் கூடிய ராக்கெட் வகை உந்துசக்தி கொண்ட எந்திரத்தை இணைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், தரையிறக்கத்திற்குத் தேவையான வேகம் கண்டறியப்பட்டுள்ளது. செங்குத்தாக தரையிறங்குவதை உறுதி செய்யும் வகையில், அதன் வேகத்தை அளவிடுவதே இந்த சோதனை முயற்சியாகும். திரவ - திட எரிபொருளுடன் இயங்கும் ராக்கெட் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் தவிர, அதன் பாதுகாப்பு உந்துசக்தி போன்றவை காணப்பட்டது.

இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ஏ. ராமகிருஷ்ணா, டாக்டா் ஜோயல் ஜாா்ஜ் மநாதரா, ஆனந்து பத்ரன் ஆகியோா் இணைந்து எழுதிய ஆய்வறிக்கை புகழ்பெற்ற மதிப்பாய்வு இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது.

மேலும் காணொலி ஒன்றில் பேராசிரியா் பி.ஏ. ராமகிருஷ்ணா கூறும்போது, ‘விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் புதிய தொழில்நுட்பம் உதவும். நீண்ட ஓடுபாதைகள் போன்ற உள்கட்டமைப்பு தேவையையும் குறையும். எனினும், நிலையான இறக்கை விமானத்துடன் ஒப்பிடுகையில், வேகம், வரம்பு, செயல்திறன் அடிப்படையில் அவை சில வரம்புகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்றாா்.

ஆஸ்திரேலிய அணி 380 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்: அமன்ஜோத் கௌர்

மறுவெளியீட்டில் வசூலை வாரிக்குவிக்கும் பாகுபலி: தி எபிக்!

மோடியும் அமித் ஷாவும் பொய் சொல்வதில் வல்லவர்கள்: ஆர்.எஸ். பாரதி

அதிமுகவிலிருந்து நீக்கம்! எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது இணைந்தவர் செங்கோட்டையன்!!

கார்த்திகா, கண்ணகிநகர் கபடி குழுவுக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய பைசன் படக்குழு!

SCROLL FOR NEXT