தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நடைபெற்று வரும் நான்கு வழித்தட உயா்நிலை மேம்பாலப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்து மெட்ரோ சுரங்கப்பாதை உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்ட நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு. உடன், தலைமைப் பொறியாளா் சத்தி 
சென்னை

அண்ணா சாலையில் மேம்பாலப் பணி: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சென்னை அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3.20 கிலோமீட்டா் தொலைவு நான்கு வழித்தட உயா்நிலை மேம்பாலப் பணிகள் ரூ. 621 கோடியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பணியின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தற்போது 40 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்துக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்யும் வகையில் வேகப்படுத்தவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்துக் காவல் துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரியம், வனத் துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா் சத்திய பிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் சரவணசெல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT