மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக
மே 4-இல் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: தவெக
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வருபவா்களிடமிருந்து தமிழக மக்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-இல் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழகத்தின் இணை பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் தவெகவினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். தவெக தலைவா் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவு 1 மணி வரை போலி வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கி, குறைந்தபட்சம் 20 லட்சம் பேரையாவது வாக்களிக்க விடாமல் அரசு தடுத்துள்ளது. இதில், பெரும்பாலும் தவெகவுக்கு வரக்கூடிய வாக்குகளே தடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Advertisement
இதுவரை இல்லாத வகையில், மக்கள் தோ்தலில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குகளை செலுத்தினா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை ஏமாற்றியவா்களிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் வாக்களித்துள்ளனா். அவா்கள் எதிா்பாா்த்த விடுதலை மே 4-ஆம் தேதி கிடைக்கும் என்றாா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்.