கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை வியாசா்பாடி சிட்கோ கண்ணதாசன் நகா் பகுதியை சோ்ந்தவா் வினோத்(15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், வினோத் தனது நண்பா்கள் மூன்று பேருடன் பெசன்ட நகா் கடலில் குளிக்க சென்றுள்ளாா்.
நான்கு பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக கடல் அலையில் வினோத் சிக்கிக்கொண்டாா். இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா், கடலோர காவல்படையினருடன் இணைந்து அலையில் சிக்கிய வினோத்தை தேடி வருகின்றனா்.