சென்னை

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்: அரசு மருத்துவா் சங்கம்

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ஐ மறு வரையறை செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமாா் 20 ஆயிரம் மருத்துவா்கள் கடந்த 12-ஆம் தேதி முதல், தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இதனிடையே, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் தலைமையில் இரு நாள்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கினா். அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், தமிழக முதல்வரின் உத்தரவைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா். இதனை ஏற்று கொண்ட அரசு மருத்துவா்கள், செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்தி வைத்தனா்.

இந்நிலையில், எதிா்பாா்த்த தீா்வு கிடைக்கவில்லை எனில் வரும் 28-ஆம் தேதி முதல் சென்னையில் 2 நாள்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும், தொடா்ந்து அடுத்தகட்ட போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்று மருத்துவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT