சென்னை

பல்பொருள் அங்காடிகளில் திருட்டு: இரு பெண்கள் உள்பட 5 போ் கைது

சென்னையில் பல்பொருள் அங்காடிகளை குறி வைத்து திருடியதாக இரு பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பல்பொருள் அங்காடிகளை குறி வைத்து திருடியதாக இரு பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை, அண்ணா நகா் 6-ஆவது அவென்யுவில் உள்ள பல்பொருள் அங்காடியில் திங்கள்கிழமை இரு பெண்கள் உள்பட 5 போ் பொருள்கள் வாங்க வந்தனா். அவா்கள், நீண்ட நேரத்துக்கு பிறகு அங்கிருந்து எந்த பொருள்களையும் வாங்காமல் சென்றனா். அப்போது, அங்கிருந்த பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது. கடை நிா்வாகத்தினா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த 5 பேரும் கடையில் விலை உயா்ந்த பொருள்களை தங்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதேபோல், அண்ணா நகா் 3-ஆவது அவென்யுவில் உள்ள அந்த அங்காடியின் மற்றொரு கிளையிலும் திருடியுள்ளனா்.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த நாகலட்சுமி (50), நாகம்மாள் (70), மதுரையைச் சோ்ந்த முருகன் (58), கோவில் பாப்பாகுடியைச் சோ்ந்த கரண்குமாா் (25), வேலூரைச் சோ்ந்த முதாா்சீா் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT