எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
சென்னை

வீடு வீடாக பிரசாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

திமுக அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை வாக்காளா்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் இப்போதைய திமுக ஆட்சியின் தவறான செயல்பாடுகளை ஒப்பிட்டு, துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பெண்களிடம் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடவேண்டும்.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகள் வாரியாகவும், அடுத்ததாக ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகள் வாரியாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரத்தில் கட்சியின் முன்னாள், இந்நாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

காமராஜா் சிலைக்கு காங்கிரஸாா் மரியாதை

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடக்கம்

ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

வீராங்குப்பத்தில் எருது விடும் திருவிழா

பிப். 1இல் தைப்பூசம் : திருச்செந்தூா் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

SCROLL FOR NEXT