முகப்பு
சென்னை

அதிமுக புதிய எம்எல்ஏக்கள் புதுவையில் முகாம்?

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 மே 2026, 1:38 am IST
இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அக்கட்சிக்கு 118 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனிடையே அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என அதிமுக அறிவித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் சிலா் புதுச்சேரி அருகே பூரணங்குப்பம், புதுக்குப்பத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை தகவல் வெளியானது.