நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன: ஆட்சியர் பா.பொன்னையா
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமைடந்து வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில், தாம்பரம் அஞ்சுகம் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் இருந்த 250-க்கும் மேற்பட்டோர் பெருங்களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்கு ஆட்சியர் பொன்னையா வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, அங்குள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
1 அடிக்கு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுபோல, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுவர். இதற்காக, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.