காஞ்சிபுரம்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜைன மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, நிகழாண்டு 1 முதல் 10-ஆம் வகுப்பு பயில்வோருக்கு பள்ளி படிப்பு உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி மேற்படிப்பு உதவித் தொகையும், தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான, அக்டோபர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
எனவே, சிறுபான்மையின மாணவர்கள் உரிய காலத்துக்குள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT